இளம்பெண்ணை தாக்கிய சுறா மீன்: ஹெலிகாப்டரில் பறிப்போன உயிர்!
சுறா மீன் தாக்கியதில் 30 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை தாக்கிய சுறா மீன்
கிரான் கனாரியாவின் விமான நிலையத்திலிருந்து(Gran Canaria’s airport) 278 மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் நீர் பரப்பில் கட்டுமரத்தில் இருந்த 30 வயது பெண்ணை சுறா மீன் ஒன்று தாக்கியது.
ஸ்பானிஷ் விமான படை ஹெலிகாப்டர் மூலம் Gran Canaria மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், அவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், சுறா மீன் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்த பெண், ஹெலிகாப்டரில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சுறா மீன் தாக்குதல் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட நிலையில், அவர் கிட்டத்தட்ட 7 மணி நேரங்களுக்கு பிறகு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |