தோல்விக்கு மட்டும் நானா? பாகிஸ்தான் பயிற்சியாளர் பேசியபோது மைக்கை ஆஃப் செய்த அதிகாரி! சர்ச்சையான வீடியோ
தோல்வியடைந்தால் மட்டும் விளக்கம் அளிக்க தன்னை அனுப்புவதாக கூறிய பாகிஸ்தான் பயிற்சியாளரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை நடக்க உள்ளது
பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால் விளக்கம் அளிக்க தன்னை அனுப்புகிறார்கள் என பயிற்சியாளர் ஷான் டெயிட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 6வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஷான் டெயிட் செய்தியாளர்கள் முன் பேசினார்.
அப்போது அவர், 'நாங்கள் மோசமாக தோற்கும்போது... மோசமாக தோற்கடிக்கும்போது அவர்கள் என்னை அனுப்புகிறார்கள்' எனக் கூற உடனே அதிகாரி ஒருவர் வேகமாக வந்து மைக்கை ஆஃப் செய்தார்.
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேசுவதுபோல் உங்கள் வார்த்தைகள் உள்ளது என அவர் கூறினார். அதன் பின்னர் நான் நன்றாக இருக்கிறேன் எனக் கூறி ஷான் தனது பேச்சை தொடர்ந்தார்.
Pakistan bowling coach Shaun Tait speaks to the media after the sixth T20I#PAKvENG | #UKSePK https://t.co/bS03Yp0WJf
— Pakistan Cricket (@TheRealPCB) September 30, 2022
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.