குடும்பத்தினரின் முடிவுக்கு மறுப்பு... மருமகளை அடித்தே கொன்ற நபர்: பிரித்தானியாவில் சம்பவம்
கட்டாய திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி அடித்தே கொன்றுள்ளார், குறித்த பெண்ணின் தாய் மாமன்.
குப்பை மேட்டில் சடலம்
பயோமெடிக்கல் மாணவியான 20 வயது சோமையா பேகத்தின் சடலம், பிராட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள அவர்களது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
@PA
சுமார் ஒருவார காலம் நீண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறுதியில் பொலிசார் மற்றும் சிறப்பு குழுவினர் குறித்த மாணவியின் சடலத்தை மீட்டனர். இந்த வழக்கில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான முகமது தாரூஸ் கான் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடக்கத்தில் மறுத்து வந்த அவர், நேற்று பிராட்ஃபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
சம்பவத்தின் போது மாணவி சோமையா தமது மாமா ஒருவருடனும் பாட்டியுடனும் வசித்து வந்துள்ளார். சோமையாவுக்கு 16 வயதிருக்கும் போதே அவரது தந்தை பாகிஸ்தானில் உள்ள உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
@men media
ஆனால் சோமையா குறித்த கட்டாய திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவே, தமது சகோதரர் முகமது தாரூஸ் கான் என்பவருடன் இணைந்து கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
குப்பை அள்ளும் பையில்
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 25ம் திகதி முகமது தாரூஸ் கான் மூன்று முறை சோமையா வசித்து வந்த குடியிருப்புக்கு சென்றுள்ளார். அன்று மதியத்திற்கு மேல் 3.30 மணியளவில் கடைசியாக சோமையா தமது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தமது நிலை குறித்து குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சோமையாவின் சடலத்தை குப்பை அள்ளும் பையில் திணித்து தமது வாகனத்திலேயே எடுத்துச் சென்றுள்ளார் முகமது தாரூஸ் கான்.
@swns
நீதிமன்ற விசாரணையில் சோமையாவை கெளரவ கொலை செய்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள உறவினர்களின் விருப்பமும் இதுவாக இருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.