காதலை ஏற்க மறுப்பு: மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த தமிழர்

Singapore
By Arbin Feb 03, 2023 03:26 AM GMT
Report

சிங்கப்பூரில் காதலை ஏற்க மறுத்த பெண் மீது 1.9 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டு தமிழர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இழப்பீடு கேட்டு வழக்கு

சிங்கப்பூரில் ட்ரோன் நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணியாற்றி வருகிறார் கெளஷிகன். இவரே தமது காதலை ஏற்க மறுத்த Nora Tan Shu Mei என்பவர் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தவர்.

காதலை ஏற்க மறுப்பு: மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த தமிழர் | She Refused To Be His Girlfriend Man Sues Woman

Picture: AeroLion Technologies

மட்டுமின்றி, Nora Tan Shu Mei தமது காதலை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் தமது தொழிலையும் பாதித்ததாக அந்த புகார் மனுவில் கெளஷிகன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பதிலுக்கு Nora Tan Shu Mei என்பவரும் கெளஷிகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அவரது குடியிருப்பை இழக்காமல் இருப்பதற்கான செலவை மீட்டெடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி கெளஷிகன் தமக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாகவும், இவருக்கு அஞ்சி siren alarm sensor மற்றும் smart video doorbell ஆகியவையும் பொருத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நற்பெயருக்கு களங்கம்

ஆனால், Nora Tan Shu Mei தமது வேண்டுகோளை ஏற்க மறுத்ததால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்றார். இதனால், குறைந்தது 5 தொழில் முதலீடுகளை தாம் இழந்ததாகவும் கெளஷிகன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தொழிலில் ஏற்பட்ட இழப்பிற்காக சுமார் 750,000 பவுண்டுகள் இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும், அத்துடன் தமக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பிற்காக 105,000 பவுண்டுகள் அளிக்க வேண்டும் எனவும் கெளஷிகன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நீதிமன்றம் கெளஷிகனின் புகார் மனுவை ஏற்க மறுத்ததுடன், பெண் ஒருவரை காதளிக்க வலியுறுத்தி நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கு பிப்ரவரி 9-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உயர் நீதிமன்றப் பட்டியல் கூறுகிறது.

காதலை ஏற்க மறுப்பு: மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த தமிழர் | She Refused To Be His Girlfriend Man Sues Woman

Picture: Terence Ong

சிங்கப்பூர் அரிமா சங்க உறுப்பினர்களான இருவரும் 2016ல் முதன்முறையாக சந்தித்துக் கொண்டதுடன், நண்பர்களாக மாறினர். ஆனால் நாளடைவில் கெளஷிகன் அவர் மீது காதல் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும், தாம் ஒரு நண்பராக மட்டுமே கருதுவதாகவும் Tan தெரிவித்துள்ளார். அத்துடன் கெளஷிகனுடன் பழகுவதையும் சந்திப்பதையும் அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஜூன் 2019 மற்றும் டிசம்பர் 2020ல், Tan தனக்கு எதிராக அவதூறாக நடந்து கொண்டதாக கெளஷிகன் குற்றம் சாட்டினார். தமக்கு எதிராக தவறான தகவல்களை அவர் பரப்பியதாகவும் கெளஷிகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இனிமேலும் தம்மால் கெளஷிகனுடன் பேசவோ பழகவோ முடியாது என உறுதியாக தெரிவித்த நிலையில் தான் கெளஷிகன் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US