வெள்ளிக்கிழமை பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு மகிழ்ச்சியாக சென்றார்: மீராவின் ஆசிரியை உருக்கம்
விஜய் ஆண்டனி மகள் மீரா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது ஆசிரியை ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று காலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரைபிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு காலை 9 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் பள்ளி தோழிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியை பேசியது
ஆசிரியை கூறும்போது, " மீரா மிகவும் தைரியமான குழந்தை. யாருக்கு ஒரு கஷ்டம் வந்தாலும் அவள் தான் ஓடிப்போய் நிற்பாள். எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வார். கேப்டன் அவர் தான். வெள்ளிக்கிழமை பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு மகிழ்ச்சியாகதான் சென்றாள்.
மீராவுக்கு மன அழுத்தம் ஓன்றும் இல்லை. ஜாலியான குழந்தை மீரா தான். யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர் தான் வெளியே கொண்டு வருவார். பேண்ட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு பையன் மாதிரியேதான் இருப்பார். மீராவின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது" என உருக்கமான பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |