பாம்புகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா?
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷெட்பால் கிராமம் புனேவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்த கிராமம் பாம்புகளை வழிபடுவது மட்டுமின்றி, இங்குள்ள மக்கள் தங்களுடன் நிரந்தரமாக வாழ பாம்புகளுக்கு இடமும் அளிக்கிறார்கள்.
இந்த கிராம் மக்களின் பாரம்பரியம் உலகின் மிக கொடிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் நாகப்பாம்புகளுடன் வாழ்வதாக இருக்கிறது.
பாம்புகளின் கிராமம் என்று குறிப்பிடப்படும் ஷெட்பால் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் இருக்கும்.
பாம்புகள் அங்கிருக்கும் வீடுகளில் மட்டுமல்ல, வயல்களிலும், மரங்களிலும் மற்றும் கிராம மக்களின் படுக்கையறைகளிலும் கூட சகஜமாக காணப்படுகின்றன.
கிராம மக்கள் இந்த பாம்புகளுக்கு சிறிதும் பயப்படுவதில்லை, மாறாக அவற்றுடன் விளையாடுகிறார்கள், பால் கூட ஊட்டுகிறார்கள்.
ஷெட்பால் கிராம மக்கள் பாம்புகளை வழிபடுவது மட்டுமின்றி, அவற்றுக்காக தங்கள் வீடுகளில் அதற்கென பிரத்யேக அறையையும் கூட உருவாக்கி வைத்துள்ளனர்.
மேலும், அவை வீடுகளில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுகின்றன. குழந்தைகள் கூட பாம்புகளை கண்டு அஞ்சாமல் விளையாடுகிறர்கள்.
இந்த கிராம மக்கள் பாம்புகள் சிவனின் அடையாளம் என்று நம்புகிறார்கள்.
எனவே இவர்கள் பாம்புகளை வணங்குகிறார்கள் மற்றும் பாம்புகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |