இந்தியா, ரஷ்யா உறவு குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறிய கருத்து
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகளை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப்
சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பாகிஸ்தான், ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்த ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) அழைப்பு விடுத்தார்.
மேலும், பிராந்தியத்தில் சமநிலைப்படுத்தும் செயலாக பார்க்கப்பட்ட பாகிஸ்தானை ஆதரித்ததற்காக புடினுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர், "கடந்த பல ஆண்டுகளில் எங்கள் உறவுகள் மேம்பட்டுள்ளன. பல துறைகளில் உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு நன்றி.
எங்கள் இருதரப்பு உறவுகளை தீர்க்கமாக வலுப்படுத்தவும் நான் விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |