வங்கதேச முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை: டாக்கா நீதிமன்றம் உத்தரவு

Bangladesh Crime
By Thiru Feb 02, 2026 05:07 PM GMT
Report

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை

அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியது தொடர்பாக நடந்த முறைகேடு வழக்கில் டாக்கா சிறப்பு நீதிமன்றம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை: டாக்கா நீதிமன்றம் உத்தரவு | Sheikh Hasina Sentenced To 10 Years Jail

வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம், அரசு வீட்டு வசதி திட்டத்தில் கீழ் 7,200 சதுர அடி கொண்ட 2 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவரது மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்றம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

கிராமி விழாவில் எப்ஸ்டீன் தீவு குறித்த நகைச்சுவை- தொகுப்பாளருக்கு ட்ரம்ப் அச்சுறுத்தல்

கிராமி விழாவில் எப்ஸ்டீன் தீவு குறித்த நகைச்சுவை- தொகுப்பாளருக்கு ட்ரம்ப் அச்சுறுத்தல்

நீதிபதி ரபியுல் ஆலம் வழங்கிய தீர்ப்பின் படி, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இரண்டு நிலங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளிலும் தலா 5 ஆண்டுகள் என 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட  மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றொரு சரணடைந்த குற்றவாளி முகமது குர்ஷித் ஆலமுக்கு தலா 1 ஆண்டு என 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளிகள் அனைவருக்கும் தலா 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வசித்து வரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நீதிமன்ற விசாரணையின் போது தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US