550 மில்லியன் பவுண்ட் ஜீவானம்சம்! உலகின் பெரும் கோடீஸ்வரர் வழக்கில் லண்டன் நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பின் முழு விபரம்
துபாயின் பெரும் கோடீஸ்வரரும், ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், பிரிந்து சென்ற தன்னுடைய மனைவிக்கு 550 மில்லியன் பவுண்ட் ஜீவானம்சமாக கொடுக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமராகவும், பெரும் கோடீஸ்வரருமான Sheikh Mohammed Bin Rashid Al-Maktoum-ன் ஆறு மனைவிகளில் இளையவராக இருந்தவர் தான் Haya Bint Al-Hussain.
இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், Sheikh Mohammed Bin Rashid Al-Maktoum, தன்னுடைய மற்ற இரு குழந்தைகளையும் Sheikha Latifa மற்றும் Sheikha Shamsa ஆகியோரை கடத்திக் கொண்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக துபாய்க்கு அழைத்து வந்ததால்,இதை அறிந்து அதிர்ச்சியடைந்த Haya Bint Al-Hussain உயிர் பயம் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பிரித்தானியாவுக்கு பறந்தார்.
அதன் பின் Haya Bint Al-Hussain பிரித்தானியா நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். Sheikh Mohammed Bin Rashid Al-Maktoum நீதிமன்ற விசாரணையில் தான் குழந்தைகளை கடத்தவில்லை என்று மறுத்து வந்தார்.
ஆனால், அவருடைய மனைவி பிரித்தானியாவின் மெய்காப்பாளருடன் தொடர்பில் இருப்பதை அறிந்த அவர், அவரை அச்சுறுத்தும் வகையில் நீ வாழ்ந்தாய், நீ இறந்துவிட்டாய் போன்ற கவிதை எல்லாம் வெளியிட்டார்.
அவர் பிரித்தானியாவிற்கு பறந்த பிறகும், எங்கு வேண்டும் என்றாலும் உன்னை எங்களால் தொடர்பு கொள்ள முடியும் என்று அச்சுறுத்தியதால், அவருடைய மனைவி தன்னுடைய குழந்தை எங்கு மீண்டும் துபாய்க்கு கடத்தப்பட்டுவிடுவார்களோ என்று பயத்தில், தங்களுடைய பாதுகாப்பிற்காக அவர் பெரும் தொகையை செல்வழித்து வந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மனைவியான Haya Bint Al-Hussain சொல்வது அனைத்தும், உண்மை என்பது தெரியவந்துள்ளது.
இளவரசி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது தெரிகிறது. பிரித்தானியாவில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு தண்ணீர் கூட புகாத அளவுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என நீதிபதி கூறினார்.
மேலும், இவர்களுக்கு 550 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பில் 1,48,70,66,82,190 கோடி ரூபாய்) ஜீவானம்சமாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய வரலாற்றிலே இது தான் மிகப் பெரிய ஜீவானம்சம் தொகையாக கருதப்படுகிறது.