சொதப்பிய பூரன்..நொறுக்கிய ஷெப்பர்ட்: கடைசி பந்தில் மும்பை வெற்றி
ILT20 தொடரில் மும்பை எமிரேட்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது.
வாணவேடிக்கை காட்டிய ரோமரியோ ஷெப்பர்ட்
ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் மும்பை எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான சர்வதேச லீக் டி20 போட்டி நடந்தது. 
முதலில் ஆடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் வசீம் 39 ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 37 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 12 பந்துகளில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். டாம் பான்டன் 32 (21) ஓட்டங்களும், ஷாகிப் 16 ஓட்டங்களும் எடுத்தனர். 
கடைசி கட்டத்தில் வாணவேடிக்கை காட்டிய ரோமரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 31 ஓட்டங்கள் விளாச, மும்பை அணி 185 ஓட்டங்கள் குவித்தது.
அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளும், சௌதீ மற்றும் தீக்ஷணா, சித்திக் தலா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 
பின்னர் ஆடிய ஷார்ஜா அணியில் டாம் கோஹ்லர்-கேட்மோர் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் சொதப்பினர். இதனால் ஷார்ஜா அணி 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தடுமாறியது.
மிரட்டிய ரஸா
அப்போது களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அதிரடியில் மிரட்டினார். 33 பந்துகளை எதிர்கொண்ட சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
Humara Sikandar, mast kalandar 😌💛#ShaanSeSharjah #RoarAsOne #SWvMIE pic.twitter.com/QEzfBoCbUW
— Sharjah Warriorz (@Sharjahwarriorz) December 7, 2025
அணியின் ஸ்கோர் 171 ஆக உயர்ந்தபோது கேட்மோர் 51 (42) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
களத்தில் இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஓட்டங்களை சேர்த்தார். கடைசி ஓவரை ஷெப்பர்ட் வீச, தினேஷ் கார்த்திக் 12 ஓட்டங்களில் பரூக்கியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஷார்ஜா அணி ஒரு ரன் மட்டுமே எடுக்க மும்பை எமிரேட்ஸ் வெற்றி பெற்றது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |