மனைவியை விவாகரத்து செய்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான்! மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தவானுக்கும் ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தவானை விட அவர் மனைவி ஆயிஷா 10 வயது மூத்தவர் ஆவார். ஆயிஷா ஆங்லோ – இந்தியன் ஆவார்.
அவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார். அங்கு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்த நிலையில் இரண்டு குழந்தைகள் ஆயிஷாவுக்கு பிறந்தது. பின்னர் கணவரை அவர் விவாகரத்து செய்துவிட்டார். இதன் பின்னர் ஆயிஷாவுக்கும் தவானுக்கும் காதல் மலர்ந்த நிலையிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதோடு ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பிள்ளைகளையும் தவான் தத்தெடுத்து கொண்டார். இந்த நிலையில் தவான் - ஆயிஷா தம்பதி விவாகரத்து பெற்று தற்போது பிரிந்துள்ளனர்.
இதன் மூலம் 8 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முறிந்துள்ளது. ஷிகர் தவானுடன் விவாகரத்து ஆகியிருப்பதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், எனக்கு இருமுறை விவாகரத்துக்கு ஆகும் வரையில் விவாகரத்து என்பது ஒரு அழுக்கான வார்த்தை என நினைத்திருந்தேன். விவாகரத்து என்றால் முன்பை விட வலிமையானவள் என பொருள், விவாகரத்து என்றால் அற்புதமான உறவுகளை நான் கொண்டிருந்தேன், புதிய உறவுகளை முன்னெடுத்து செல்ல அது எனக்கு பாடங்களை கற்று கொடுத்தாதாக அர்த்தம் என நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.