சித்ரவதை செய்த காதல் மனைவியை பிரிந்த ஷிகர் தவான்! குழந்தையின் நிலை என்னவாகும்? வெளியான தகவல்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவியை பிரிந்த நிலையில், அவரது குழந்தை யாரிடம் இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து பெற்ற தவான்
தனது மனைவி தன்னை மனரீதியாக சித்திரவதை செய்ததாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குற்றச்சாட்டை முன்வைத்து விவாகரத்து கோரியிருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கியது.
ஆயிஷா தனது ஒரே மகனைப் பிரிந்து பல ஆண்டுகளாக வாழ வற்புறுத்தியதன் மூலம் தனக்கு மனவேதனை ஏற்பட்டதாக தவான் கூறியதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
குழந்தை யாரிடம் இருக்கும்?
ஆனால் குழந்தை யாரிடம் இருக்கும் என்ற கேள்வி எழும்பியது. இதற்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
எனினும், தவான் தன் மகனை சந்திக்கவும், வீடியோ அழைப்பில் பேசவும், சிறிது காலம் உடன் தங்கவும் அவருக்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றம் கூறியது.
அத்துடன் தவான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் மகன் ஜோராவர், தன் பள்ளி விடுமுறையில் பாதியாவது செலவிட வேண்டும் செலவிட அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |