இந்த தோல்வி எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது - ஷிகர் தவான் உருக்கம்
இந்த தோல்வி எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி
இந்த ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிச் செல்லும்.
நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி நுழைந்துள்ளது. நேற்று உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்றான தரம்சாலாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் போட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அனல் தெறிக்க நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி அடைந்தது.
தோல்வி குறித்து ஷிகர் தவான் உருக்கம்
இதன் பின்பு, பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தோல்விக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த தோல்வி எனக்கு மிகுந்த வருத்தம் கொடுக்கிறது. ஸ்பின்னர் மீது இறுதி வரை நம்பிக்கை வைத்தேன். ஆனால், எனது முடிவு தவறாகிவிட்டது. 2 இன்னிங்ஸின் பவர்ப்ளேயிலும் நாங்கள் சிறப்பாக விளையாடவே கிடையாது. இந்தப் போட்டியில் முதல் ஓவரை நாங்கள் வீணடித்துவிட்டோம்'' என்று தெரிவித்தார்.
Delhi Capitals have spoiled the party of the Punjab Kings! ?
— OneCricket (@OneCricketApp) May 18, 2023
PBKS won't be able to make it to 16 points.#PBKSvDC #IPL2023 #IPLPlayOffs pic.twitter.com/lVKUlkr1Wf