தீ விபத்தில் கருகிய 1000க்கும் மேற்பட்ட கார்கள்: நடுக்கடலில் தத்தளித்த சரக்கு கப்பல்!
பிளிசிட்டி அஸ் என்ற சரக்கு கப்பல் அட்லாண்டிக் கடலில் உள்ள azores என்ற தீவிற்கு அருகில் கடந்த புதன்கிழமை மதியம் தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் அந்தக்கப்பலில் பணிபுரிந்த 22 நபர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பணமா நாட்டு தேசியக்கொடியுடன் பிளிசிட்டி அஸ்(Felicity Ace) என்ற சரக்கு கப்பல் வோல்க்ஸ்வாகன் கார்கள் உட்பட கிட்டத்தட்ட 4000 கார்களை ஏற்றிக்கொண்டு davisville துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளது.
அப்போது அட்லாண்டிக் கடலில் உள்ள azores என்ற தீவிற்கு அருகில் கடந்த புதன்கிழமை மதியம் கப்பலின் சரக்கு தளம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அபாய எச்சரிக்கை சமிக்கை எழுப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த portugueseயின் கடல் மற்றும் விமானப்படை, கப்பலில் உள்ள 22 பணியாளர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான Felicity Ace கப்பலை புதன் கிழமை அதன் உரிமையாளர் பிற கப்பல்களின் உதவியோடு கரைக்கு இழுத்து வந்துவிட்டதாக கடற்படை தெரிவித்த்துள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள வோல்க்ஸ்வாகன் நிறுவனம் தீ விபத்து ஏற்பட்டுள்ள Felicity Ace கப்பலில் சுமார் 3965 கார்கள் இருந்ததாகவும் அதில் 1000க்கும் மேற்பட்ட கார்கள் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் தீ விபத்து ஏற்பட்டுள்ள கப்பலில் வோல்க்ஸ்வாகன் உட்பட porsche, audi மற்றும் lamborghini போன்ற நிறுவனத்தின் கார்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 100 மேற்பட்ட கார்கள் டெக்சாஸில் உள்ள ஹௌஸ்டான் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து lamborghini நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது பாதிப்பு குறித்து எதுவும் விளக்கம் அளிக்காமல் இந்த விபத்து குறித்து சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் அவர்கள் விளக்கம் கேட்டு இருப்பதாக மட்டும் தெரிவிதித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பாதிக்கப்பட்ட கார் நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களிடம் தகவல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.