இலங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்குக்கப்பல்: பாலத்தில் மோதி பாரிய விபத்து
இலங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, அமெரிக்காவிலுள்ள நதியொன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலம் ஒன்றின்மீது மோதியதில், அந்த பாலம் நிலைகுலைந்துவிழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
பாலம் மீது கப்பல் மோதி விபத்து
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில்லுள்ள பால்ட்டிமோர் நகரில் அமைந்துள்ள Patapsco நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள Francis Scott Key Bridge என்னும் பாலத்தின் மீது, சிங்கப்பூர் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று மோதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: Ship collides with Francis Scott Key Bridge in Baltimore, causing it to collapse pic.twitter.com/OcOrSjOCRn
— BNO News (@BNONews) March 26, 2024
இன்று அதிகாலை 1.27 மணியளவில், அந்த பாலத்தைத் தாங்கியிருக்கும் இரும்புத் தூண் மீது, அந்த சரக்குக் கப்பல் மோதியதில், பாலத்தின் ஒரு பகுதி நிலைகுலைந்து சரிந்ததாக கூறப்படுகிறது.
Dali என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல், இலங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
20 பேர் தண்ணீரில்?
கப்பலிலிருந்த 20 பேர் தண்ணீரில் விழுந்ததாகவும், மீட்புக் குழுவினர் அவர்களைத் தேடிவருவதாகவும், தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் மீட்புக் குழுவினருக்கும் அது கஷ்டத்தைக் கொடுப்பதாக உள்ளதாகவும் பால்ட்டிமோர் நகர தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
மேரிலேண்ட் ஆளுநரான Wes Moore இந்த கப்பல் விபத்து காரணமாக அவசர நிலை பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், அந்தப் பாலம் நிலகுலைந்துவிழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. கார்கள் பல தண்ணீரில் மிதப்பதாக சம்பவத்தைக் கண்ணால் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |