நடுக்கடலில் மோதிக் கொண்ட கப்பல்கள்: காணாமல் போன 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரம்
Ship Collision Near Istanbul 10 Members missing: இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் 10 மாலுமிகள் வரை காணாமல் போயுள்ளனர்.
இஸ்தான்புல்லில் கப்பல் விபத்து
இஸ்தான்புல் நகரின் அருகே உள்ள மர்மரா கடலில் ரசாயன டேங்கர் கப்பலும், சரக்கு கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின.
சிலிவ்ரி கடற்கரைக்கு அருகில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த விபத்தை துருக்கி நாட்டு Tugberk Imamoglu என்ற சரக்கு கப்பலும், Alsu என்ற ரசாயன டேங்கர் கப்பலும் மோதிக் கொண்டுள்ளன.

இந்த சம்பவத்தில் சரக்கு கப்பலில் இருந்தவர்களுடன் எந்தவொரு தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை, அவர்களின் செல்போன்களும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் அடிப்படையில் சரக்கு கப்பலானது கடலில் மூழ்கி இருக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இயக்குநரகம் தங்களுடைய X தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
10 பேரை காணவில்லை
இந்நிலையில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் கப்பலில் இருந்த 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 14 மீட்புக் கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும் களமிறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மூழ்கிய கப்பலில் இருந்து உயிர் காக்கும் படகுகள் மற்றும் பாதுகாக்கும் உபகரணங்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |