கப்பல்களுக்கு IRGC ஒப்புதல் அளிக்க வேண்டும்... ஹார்முஸ் விவகாரத்தில் ஈரான் விளக்கம்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஒருங்கிணைப்பில் மட்டுமே அனைத்துக் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க முடியும் என ஈரான் அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ளது
அத்துடன், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை விடுவிப்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி எனவும் தெரிவித்துள்ளனர். லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு திறந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தாலும், அது எப்போது என்பது மட்டும் மர்மமாக உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து நூற்றுக்கணக்கான கப்பல்களும் 20,000 மாலுமிகளும், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் பாதுகாப்பானது எனக் கருதும் பாதைகளில் மட்டுமே போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்றும், இராணுவக் கப்பல்கள் நீரிணையைக் கடக்க இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஈரானிய அதிகாரி தெரிவித்தார்.
ஈரான் உறுதிப்படுத்த வேண்டும்
மேலும், ஈரானின் நிதியை விடுவிப்பது, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட, சுமார் 30 பில்லியன் டொலர் மதிப்பிலான முடக்கப்பட்ட வருவாயை விடுவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தொகை ஈரான் மீது இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் முடக்கப்பதாகும். இதனிடையே, ஹார்முஸ் வழியாகச் செல்லும் சில வழித்தடங்கள் திறந்தே இருக்கும் என்றும், ஆனால் அவை பாதுகாப்பானவை என ஈரான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஈரானுடன் ஒருங்கிணைந்து, IRGC மற்றும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் அங்கீகாரத்துடன் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |