அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்: கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை
Ships should ignore US false claims iran warns: அமெரிக்காவின் உத்தரவாதங்களை நம்பி அனுமதிக்கப்படாத நீர் வழியில் கப்பல்கள் செல்லக்கூடாது என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை பாரசீக வளைகுடா பகுதியில் பயணம் செய்யும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு நிலை குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) உத்தரவாதங்களை புறக்கணிக்க வேண்டும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை கடுமையான எச்சரிக்கையைத் வெளியிட்டுள்ளது.
ஈரான் கடற்படையின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த மூலோபாய நீர்வழிப்பாதையில் ஈரானுக்கு கட்டுப்பாடு இல்லை என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறும் கருத்துக்களை நம்பி கப்பல் கேப்டன்களும் கப்பல் நிறுவனங்களும் தங்களது கப்பல்களையும் சரக்குகளையும் ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் ஈரான் அதிகாரிகளால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களை மட்டுமே கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் வழிசெலுத்தல் விதிகளை மதிக்க தவறியதால், இன்று அதிகாலை மேலும் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.