மகளுக்கு ஷிவ் நாடார் கொடுத்த மிகப்பெரிய பரிசு.., நிறுவனம் தொடர்பாக அறிவிப்பு
தனது மகள் ரோஷ்ணி ரோஷ்னி நாடாருக்கு HCL நிறுவன பங்குகளை ஷிவ் நாடார் வழங்கியுள்ளார்.
என்ன பரிசு
HCL குழுமத்தின் நிறுவனர் ஷிவ் நாடாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது எச்சிஎல் நிறுவன பங்குகளை தனது மகள் ரோஷ்ணி ரோஷ்னி நாடாருக்கு வழங்கியுள்ளார்.
HCL Corp மற்றும் Vama Sundari Investments (வாமா டெல்லி) ஆகியவற்றில் உள்ள தனது பங்குகளில் 47% ஐ தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவுக்கு வழங்கி உள்ளார்.
இந்த நிறுவனம் 12 பில்லியன் டொலர் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் அனைத்து முடிவுகளுக்கும் மல்ஹோத்ரா பொறுப்பாவார்.
இவர் இரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் பெறுவார். அதேபோல வாமா டெல்லி மற்றும் HCL கார்ப் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக மாறுவார்.
வாமா டெல்லியின் 44.17% பங்குகள் மற்றும் HCL கார்ப் நிறுவனத்தின் 0.17% பங்குகளை பெறுவதால் நிறுவனத்தில் முடிவெடுக்கும் வீட்டோ அதிகாரம் இவருக்கு வழங்கப்படும்.
மேலும், HCL இன்ஃபோசிஸ்டம்ஸில் வாமா டெல்லியின் 12.94% பங்குகள் மற்றும் HCL கார்ப் நிறுவனத்தின் 49.94% பங்குகளில் வாக்களிக்கும் உரிமையை வைத்திருப்பார்.
இந்த அறிவிப்புக்கு முன்பு, வாமா டெல்லி மற்றும் எச்.சி.எல் கார்ப் இரண்டிலும் ஷிவ் நாடார் மற்றும் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா முறையே 51% மற்றும் 10.33% பங்குகளை வைத்திருந்தனர்.
நிறுவனத்திற்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், குடும்ப அளவில் நடந்த நிகழ்வில் இந்த ஷேர் மாற்றப்பட்டு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |