ஐபிஎல் போட்டியில் சாதனைப் படைத்த ஷிவம் துபே
நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷிவம் துபே சாதனைப் படைத்துள்ளார்.
சாதனைப் படைத்த ஷிவம் துபே
தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போட்டிப்போட்டு விளையாடி வருகிறது.
தற்போது ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டது. முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் துடுப்பாட்டத்தில் இறங்கியது.
இப்போட்டியின் முடிவில் டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்து சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, சென்னை அணி வெற்றி பெற்றது.
@Itzshreyas07
நேற்று நடந்த ஆட்டத்தில் களத்தில் இறங்கிய வீரர் ஷிவம் துபே சிறப்பாக தன்னுடைய விளையாட்டை தொடங்கினார். 12 பந்துகளில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தார். ஆனால், 25 ஓட்டங்களை எடுத்து அவுட்டானார். ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்களை காட்டிலும், ஷிவம் துபே தான் 25 ரன்கள் அதிகமாக எடுத்தார்.
@MSDianAbhiii
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் ஷிவம் துபே 1000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 315 ஓட்டங்களை இவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Shivam Dube completes 1000 IPL runs in style with a maximum!
— CricTracker (@Cricketracker) May 10, 2023
?: IPL#ShivamDube #ChennaiSuperKings pic.twitter.com/00itJOriZn