தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இறுதிப்போட்டியில் மிரட்டிய CSK வீரர் கூறிய விடயம்
ஐபிஎல் 2024 சீசனில் தங்கள் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க தோனி விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷிவம் தூபே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்
CSK அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய நிலையில், கேப்டன் எம்.எஸ். தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்ற கேள்வியே உலா வருகிறது.
ஒன்பது மாதங்கள் இடைவெளி உள்ளதால் உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அடுத்த சீசனில் விளையாடும் வாய்ப்பு உள்ளது என தோனியே கூறியிருந்தாலும், ரசிகர்களுக்கு இன்னும் சந்தேகம் நீடிக்கிறது.
அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா?
இந்த நிலையில் சென்னை அணி வீரர் ஷிவம் தூபே தனது விருப்பத்தை கூறியுள்ளார். 2023 ஐபிஎல் தொடர் குறித்து அவர் கூறுகையில், 'ஒரு அணியுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. மஹி பாயின் (தோனி) கீழ் விளையாடிதன் மூலம் அது கிடைத்துள்ளது இன்னும் சிறப்பு. குறிப்பாக, அவரது தலைமையில் ஐபிஎல் கோப்பையை வெல்வது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
எனது பங்கு என்னவென்று மஹி பாய் எனக்கு தெளிவுபடுத்தினார். சீக்கிரமாக நான் வெளியேறினாலும் எந்த பிரச்சனையும் இல்லை, உன்னுடைய சிறந்ததை முயற்சி செய் என்பது சுருக்கமாக தெளிவாக இருந்தது. அவர் (தோனி) அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு அவர் தேவை. அவருக்கு கீழ் நான் வளர முடியும்' என தெரிவித்துள்ளார்.
BCCI/IPL
அதிரடியில் மிரட்டல்
ஷிவம் தூபே இந்த தொடரில் 418 ஓட்டங்கள் குவித்தார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். அத்துடன் 35 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.
மேலும், இறுதிப் போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தூபே, 21 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ANI