தோனிக்காக மட்டுமே நாங்கள் இதை செய்தோம்! மஹி பாய் உங்களுக்காக எதையும் செய்வோம்..ஜடேஜாவின் உருக்கமான பதிவு
ரவீந்திர ஜடேஜா கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தோனிக்காக மட்டும் தான் இது என குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து முறை சாம்பியன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி வாகை சூடியது. இறுதிப் போட்டியின் வெற்றிக்கு அணி வீரர்கள் காரணமாக இருந்தாலும், வெற்றிக்கான ஓட்டத்தை எடுத்து ஜடேஜா ஹீரோவானார்.
தோனியின் கடைசி ஐபிஎல் என்று கூறப்பட்ட நிலையில், இந்த வெற்றி அவரது ரசிகர்களை இன்ப மழையில் நனைய வைத்துள்ளது.
BCCI
ஜடேஜாவின் நெகிழ்ச்சி பதிவு
அதேபோல் SIR Jadeja என ட்விட்டரில் குறிப்பிட்டு ரசிகர்கள் அவரையும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தனது வெளியிட்டுள்ள பதிவில், 'தோனிக்காக மட்டுமே நாங்கள் இதனை (வெற்றி) செய்தோம். மஹி பாய் உங்களுக்காக எதையும் செய்வோம்' என கூறியுள்ளார்.
மேலும் அதில் கோப்பையுடன் தன் மனைவி மற்றும் தோனி இருக்கும் புகைப்படம், தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
We did it for ONE and ONLY “MS DHONI.? mahi bhai aapke liye toh kuch bhi…❤️❤️ pic.twitter.com/iZnQUcZIYQ
— Ravindrasinh jadeja (@imjadeja) May 30, 2023