வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாட துவங்குங்கள்! இந்தியர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் வீரர்
இந்தியர்கள் தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாட தொடங்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில்(92), விராட் கோலி(88) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (82), என ஓட்டங்களை குவித்து அசத்தினர்.
இவை ஒருபுறம் இருக்க ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இலங்கை அணி பேட்ஸ்மேன்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கலங்கடித்தனர்.
13,1 ஓவர்கள் முடிவிலேயே இலங்கை அணி 29 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
மோசமான தோல்வி இலங்கை அணிக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 19.4 ஓவர்கள் முடிவில் 66 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி படுதோல்வி அடைந்தது.
இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது அபாரமான பந்துவீச்சால் 5 ஓவர்களுக்கு 18 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைதார்.
அவரை தொடர்ந்து சிராஜ் 3 விக்கெட், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.
பாகிஸ்தான் வீரர் பாராட்டு
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதில், இந்திய அணி மிகவும் வலுவான அணியாக மாறி வருகிறது, ஆனால் இந்திய ரசிகர்களுக்கு வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட தொடங்குங்கள் என்பதே.
Time for India to start celebrating their Fast bowlers. #INDvsSL pic.twitter.com/dQklgFNUpL
— Shoaib Akhtar (@shoaib100mph) November 2, 2023
முகமது ஷமி தன்னுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சி.
அதைப்போல சிராஜ் மற்றும் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |