பாகிஸ்தானுக்கு டி20 உலகக்கோப்பைக்கு நான் வேண்டும் என்றால்..கெய்ல் சாதனையை தகர்க்க காத்திருக்கிறேன் - 41 வயது வீரர்
டி20 உலகக்கோப்பையில் விளையாடி, கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தோல்வி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறமுடியாமல் போனதால், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகினார்.
இது ஒருபுறம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூத்த வீரர் சோயிப் மாலிக் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனிக்க வைத்துள்ளது.
Getty Images
மாலிக் விருப்பம்
41 வயதாகும் மாலிக் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலைக் கடந்து 2000 ஓட்டங்களைக் கடந்து, சிறந்த வீரராக வர வேண்டும் என்பதே எனது இலக்கு. நான் விளையாட தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு தெளிவு தேவை. 2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த நான் கிரிக்கெட் விளையாடவில்லை. நான் விளையாட்டை ரசிப்பதால் விளையாடுகிறேன். உடற்தகுதி பிரச்சனை இல்லை' என தெரிவித்துள்ளார்.
ANI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |