பொலிசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பு: குடியிருப்பை சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சொந்த தந்தையை கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க் நகரின் குயின்ஸ் மாவட்டத்திலேயே உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலையில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பகல் சுமார் 6.30 மணியளவில் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பின் கழிவறையில் 72 வயது நபர் இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார்.
உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் இருந்த அந்த நபர் மருத்துவ உதவிக்குழுவினரால் முதலுதவி அளிக்கும் நேரம் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அதே குடியிருப்பில் இருந்து மயக்கமுற்ற நிலையில் 70 வயது தாயார் ஒருவரும் 31 வயது ஆண் ஒருவரும் 29 வயது பெண் ஒருவரையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இவர்கள் மூவரின் உடலில் எவ்வித காயமும் இல்லாத நிலையில், எவ்வாறு மயக்கமுற்றார்கள் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்
மேலும், அதே குடியிருப்பில் இருந்து உளவியல் பிரச்சனை கொண்ட 30 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரின் தந்தையே கழிவறையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் மரணமடைந்தவர் என கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபரே தமது தந்தையை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.