அதிகளவில் மது அருந்தி விட்டு தூங்கிய இளம்பெண்! காலையில் கண் விழித்து தனது அருகில் பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி
மெரிக்காவில் நபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் அது குறித்த புகார் கொடுத்த நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரி கவுண்டியை சேர்ந்த இளம்பெண் கடந்தாண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி வீட்டில் இருந்தார். அப்போது அவர் நண்பர் அங்கு வந்த நிலையில் இருவரும் பேசி கொண்டிருந்த போது சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து நண்பர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். பின்னர் மன வேதனையடைந்த அப்பெண் தொடர்ந்து மது அருந்தியிருக்கிறார். பின்னர் போதையில் படுக்கையில் படுத்த அவர் காலையில் எழுந்த போது அவரின் உடைகள் கீழே சிதறி கிடந்ததை பார்த்து குழம்பினார்.
மேலும் அவரருகில் போரஸ்ட் ஜான்சன் (36) என்ற நபர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னரே தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை உணர்ந்தார்.
இது குறித்து கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி தான் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் நேற்று முன் தினம் ஜான்சனை பொலிசார் கைது செய்தனர். ஆனால் அவர் $5,000 பணத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரியவந்துள்ளது.