விஜயகாந்த் உடல்நிலை குறித்து அதிர்ச்சி .., பிரபல வசனகர்த்தா மாரடைப்பால் மரணம்
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளிவந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த பிரபல வசனகர்த்தா வேலுமணி காலமானார்.
விஜயகாந்த் உடல்நிலை
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் விஜயகாந்த் குறித்து வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டார்.
வசனகர்த்தா வேலுமணி மரணம்
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்திகள் கேட்ட அதிர்ச்சியில், அவரது வசனகர்த்தாவாக இருந்த வேலுமணி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் நடித்த தேவன், எங்கள் ஆசான், விருதகிரி போன்ற படங்களுக்கு வேலுமணி வசனம் எழுதியுள்ளார். சினிமாவையும் தாண்டி அரசியல் மேடைகளில் பேசுவது குறித்து இவரிடம் விஜயகாந்த் ஆலோசனை செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ஓரிருமுறை நேரில் சென்று பார்த்துள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களாக விஜயகாந்தை பார்க்காமல் ஏக்கத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்திகளை கேட்ட வேலுமணி சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காலையில் உடல் நிலை சரியில்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு வேலுமணி உயிரிழந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        