வெடித்து சிதறிய டைட்டன்! அதிர்ச்சியடைந்ததாக விவரிக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்
நம் காலகட்டத்தில் வாழும் பலருக்கும், டைட்டானிக் என்னும் ஒரு கப்பல் மூழ்கியது என்பதைக் குறித்த விடயம் டைட்டானிக் திரைப்படத்தைப் பார்த்த பின்புதான் தெரியவந்தது என்றே கூறமுடியும்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய காட்சிகளை அப்படியே தத்ரூபமாக நம் கண் முன்னே காட்டிய டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குநர், ஜேம்ஸ் கேமரூன்.
நீர்மூழ்கிக் கப்பலுக்கும் நேர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்
கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் எச்சங்களைக் காண்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை, பெரும் செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர், டைட்டன் என்னும் சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் புறப்பட்டார்கள்.
Getty Images via AFP
ஆனால், துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே அந்த நீர்மூழ்கிக் கப்பலிலிருந்த நிலையில், ஐந்து நாட்களாகியும் அந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியாததால், அது வெடித்து, அதில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டைட்டானிக் கப்பலுக்கு நிகழ்ந்ததைப் போலவே, அதைக் காணச்சென்ற நீர்மூழ்கிக் கப்பலுக்கும் துயர முடிவு ஏற்பட்டுள்ளதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக டைட்டானிக் திரைப்பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நீர்மூழ்கியில் குறைபாடுகள்
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்ததாக தெரிவித்துள்ள ஜேம்ஸ் கேமரூன், தான் அது குறித்து பேசியிருக்கவேண்டும் என இப்போது உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த நீர்மூழ்கிக் கப்பலின் உடல் டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டிருந்தது தெரியவந்தபோதே தனக்கு அதைக் குறித்து சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் அவர்.
அது மோசமான ஐடியா என தான் எண்ணியதாக தெரிவித்துள்ள ஜேம்ஸ் கேமரூன், நான் அது குறித்து பேசியிருக்கவேண்டும், ஆனால், அந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியவர் என்னை விட ஸ்மார்ட்டாக இருந்திருக்கலாம் என்று எண்ணினேன். அத்துடன், நான் அதுபோன்ற தொழில்நுட்ப சோதனைகள் செய்ததும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |