பிரித்தானிய மற்றும் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் குறித்து WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் தென்னாபிரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்கள் பரவவிவருவது கண்டறியப்பட்டது.
அதில் VOC 202012/01 என அழைக்கப்படும் பிரித்தானிய வகை மாறுபாடு, வைரஸின் முந்தைய வகைகளை விட மிக எளிதாக பரவுவதையம், 70 சதவீதம் வேகமாக பரவும் என்பதையும் நிரூபித்துள்ளது.
கடந்த 1 மாதத்தில் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது. கடந்த 1 வாரத்தில் மட்டும் புதிதாக 10 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல், தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட 501Y.V2 வகை கொரோனா வைரஸ் கடந்த ஒரே மாதத்தில் 31 நாடுகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகை வைரஸ்களும், இப்போது உலகம் முழுக்க மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என்பது குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாக WHO கூறியுள்ளது. இதனால், அவற்றின் மீது கூடுதல் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த மாதம் பிரேசிலில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மூன்றாவது மாறுபாடு இப்போது 8 நாடுகளில் இருப்பதாக WHO தெரிவித்துள்ளது.
B1 எனப்படும் அந்த மாறுபாடு மேலும் தொற்றக்கூடியதாகவும், கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் என்ற கவலைஅளிப்பதாக WHO கூறியுள்ளது.