சிறுநீரகத்தை தானம் வழங்கியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி! கட்டணம் செலுத்த சொல்லிய நிறுவனம்
அமெரிக்காவில் சிறுநீரகம் செயலிழந்த நபருக்கு தனது சிறுநீரகங்களை வழங்கி உதவிய எலியட் மலின் என்ற நபருக்கு பெரிய தொகையை கட்டணமாக செலுத்துமாறு கூறி அதற்கான ரசீதை அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட் க்ளினின் என்ற பெண்ணின் 28 வயது மகன் சிறுநீரகம் செயலிழந்து தவித்த நிலையில், அவருக்காக மலினிடம் சிறுநீரகங்களை தானம் செய்யமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஸ்காட் க்ளினிற்கு உடனடியாக அறுவைசிகிக்சை செய்யவேண்டிய இருந்தது, இருப்பினும் யாருமே முன்வராத நிலையில் யாராவது தானமாக தருவார்களா என்று அவரது தாயார் தேடி அலைந்துள்ளார்.
இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு மலினே முன்வந்து தனது சிறுநீரகங்களை தருவதாக கூறியுள்ளார்.
மலினின் சிறுநீரகமும் ஸ்காட் க்ளீனின் சிறுநீரகத்துடன் ஒத்துபோகவே ஜூலை 2021ஆம் ஆண்டு டெக்சாஸ் பகுதியில் உள்ள பயலோர் ஸ்காட் மற்றும் வைட் ஆல் செயின்ட் என்ற மருத்துவ மையத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை நடைபெற்றுள்ளது.
எப்போதுமே சிறுநீரகங்களை பெரும் நபரிடம் அதற்கான மருத்துவ செலவுகளை மருத்துவமனையோ அல்லது மருந்து நிறுவனங்களோ வசூலிக்கும்.
ஆனால் இங்கு சிறுநீரகங்களை தனமாக வழங்கிய மலினிடம் 13,064 டாலர்களை உடனடியாக கட்டுமாறு நார்த்ஸ்டார் எனப்படும் மயக்க மருந்து வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு தவறை உணர்ந்த நார்த்ஸ்டார் நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக மாலினிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் பில்லிங்கில் ஏற்பட்ட தவறுதலால் இந்த பிழை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக வருந்துவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.