ஹார்முஸ் ஜலசந்தியில் அத்துமீறும் படகுகளை சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் அதிரடி உத்தரவு
ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் ஈரானிய படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் பதற்றமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அமெரிக்க படையினர் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள நிலையில் அதை மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி சிறை பிடித்து வருகின்றனர்.

அதைப்போல ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் வைத்திருக்கும் ஈரான், அதன் வழியாக அத்துமீறி செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர்.
டிரம்ப் அதிரடி உத்தரவு
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் ஈரானிய படகுகளை சுட்டு அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் அத்துமீறும் படகுகள் சிறியதாக இருந்தாலும் அதை சுட்டு அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சிறிய படகுகள் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகளை பதித்து வருவதாக டிரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்க படைகள் செய்து வருவதாகவும், இந்த பணியை 3 மடங்கு வேகத்தில் செய்து முடிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |