அச்சுறுத்தும் ட்ரோன்களை சுட்டு வீழத்த பிரித்தானிய இராணுவத்திற்கு சிறப்பு அனுமதி
இங்கிலாந்து இராணுவ தளங்களை அச்சுறுத்தும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பிரித்தானிய இராணுவத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது.
சிறப்பு அதிகாரம்
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி திங்களன்று குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக பிரித்தானியாவின் மிக முக்கியமான இராணுவ தளங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த அமைச்சர் ஹீலி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரோன்கள் தொடர்பில் இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் என்பது ஆரம்பத்தில் இராணுவ தளங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், பிரித்தானிய அரசாங்கம் விமான நிலையங்கள் போன்ற பிற முக்கியமான தளங்களுக்கு அந்த அதிகாரங்களை விரிவுபடுத்தும் பணியை நிராகரிக்கவில்லை.
தற்போது இராணுவத்தினர் அத்துமீறும் ட்ரோன்களைக் கண்காணிக்கவும், சிக்னல்களைக் கடத்தவும், அவற்றைத் திசைதிருப்பவும் கூடிய சிறப்பு ட்ரோன் - எதிர்ப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம்.
சிறப்பு அனுமதியால், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படலாம். முன்னதாக அக்டோபர் மாத தொடக்கத்தில், ரஷ்யாவின் எல்லையில் ரோந்து செல்ல அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து 12 மணி நேரப் பயணத்தில் இரண்டு ராயல் விமானப்படை விமானங்கள் பறந்ததாக பிரித்தானியா கூறியது.
ரஷ்யாவை நோக்கி
போலந்து, ருமேனியா மற்றும் எஸ்டோனியா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் வான்வெளியில் ட்ரோன்கள் ஊடுருவியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமீப காலங்களில் ஐரோப்பா முழுவதும் ட்ரோன்கள் வான்வெளியை அதிகளவில் அச்சுறுத்தி வருகின்றன.
இதனால் விமான நிலையங்கள் மூடப்படவும் விமானங்கள் ரத்து செய்யப்படும் நெருக்கடியும் ஏற்பட்டது. உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போர் தொடர்பாக மேற்கு நாடுகளுடனான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவை நோக்கி இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுந்தது.
ஆனால் இதில் எந்த பங்கும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது. செப்டம்பர் 16 முதல் கண்காணிப்பு சேவையான எனிக்மாவால் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் ஜேர்மனியில் குறைந்தது 18 சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |