அமெரிக்கப் படைகளுக்கு ஆபத்து என்றால்... சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ட்ரம்ப்
அமெரிக்கப் படைகளுக்கு ஆபத்தை விளைவித்தால் வெனிசுலா இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க கடற்படை
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுக்கும் போரின் ஒரு பகுதியாக, அமெரிக்கா புவேர்ட்டோ ரிக்கோவிற்கு F-35 போர் விமானங்களை அனுப்பியுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நிர்வாகத்திற்கு அழுத்தம் தரும் வகையில், தெற்கு கரீபியனில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களுடன் 10 விமானங்களும் இணையும்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக நிக்கோலஸ் மதுரோ செயல்படுவதாகவே ட்ரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டி வருகிறது. மட்டுமின்றி, வியாழக்கிழமை சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கு அருகில் இரண்டு வெனிசுலா இராணுவ விமானங்கள் பறந்து சென்றதாக பென்டகன் கூறியதைத் தொடர்ந்து, சமீபத்திய நாட்களில் மோதல் அதிகரித்துள்ளது.

ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி
இந்த நிலையில், இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க தரப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்பட்டால், அவர்கள் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செவ்வாயன்று அமெரிக்கப் படைகள் கரீபியனில் போதைப்பொருள் படகு ஒன்றை தாக்கி அழித்தது. தொடர்புடைய படகானது ட்ரென் டி அரகுவாவுக்குச் சொந்தமானது என்று ட்ரம்ப் கூறினார். அந்த சம்பவத்தில் 11 பேர்கள் கொல்லப்பட்டனர்.
வெனிசுலா தயார்
இடதுசாரி அரசியல்வாதியான மதுரோ 2024ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்காத அமெரிக்கா, மதுரோவின் ஆட்சியை சட்டவிரோதமானது என்றே கூறி வருகிறது.
மேலும், தற்போதைய நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள வெனிசுலா தயார் என்றும், சுமார் 340,000 படைகளை திரட்டி, தயார் நிலையில் இருப்பதாகவும் மதுரோ அறிவித்துள்ளார்.
வெனிசுலா தாக்கப்பட்டால், அது உடனடியாக ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்றே மதுரோ தெரிவித்துள்ளார். 1980களில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய F-16 போர் விமானங்கள் 15 எண்ணிக்கையில் வெனிசுலாவிடம் உள்ளது.
மட்டுமின்றி ரஷ்யாவிடம் வாங்கிய போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் வெனிசுலா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |