அமெரிக்காவின் குருத்வாராவில் துப்பாக்கி சூடு: இந்தியர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவில் உள்ள குருத்வாராவில் அரங்கேறிய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குருத்வாராவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாக்ரமெண்டோ (Sacramento) கவுண்டியில் உள்ள குருத்வாரா சேக்ரமெண்டோ சீக்கிய சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக காவல்துறையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Twitter
மேலும் பாதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் ஒருவரையொருவர் அறிந்த ஆண்களுக்கு இடையே நடந்ததாகவும், வெறுப்பு குற்றத்துடன் தொடர்புடைய சம்பவம் அல்ல என்றும் சாக்ரமெண்டோ கவுண்டி ஷெரீப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
சண்டையில் 3 பேர் வரை ஈடுபட்டதாக சொல்லப்படும் நிலையில், துப்பாக்கியால் தாக்கிக் கொண்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
PTI
சந்தேக நபர்களில் ஒருவர் இந்திய ஆண் என்றும், மற்றொரு சந்தேக நபர் துப்பாக்கி சூடு நடத்தியவர் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை காப்பக தரவுகளின் படி, கடந்த ஆண்டு மட்டும் 44,000 இறப்புகள் துப்பாக்கிகளுடன் தொடர்புடையவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் பாதி கொலை வழக்குகள், விபத்துகள் மற்றும் தற்காப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன, மற்றொரு பாதி தற்கொலைகளுடன் தொடர்புடையவை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.