உக்ரைனில் கடைகள் வணிகங்கள் மீண்டும் திறப்பு!
உக்ரைனின் Brovary நகரில் கடைகள் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தலைநகர் கீவிலிருந்து கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள Brovary நகரை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் அறித்ததை தொடரந்து, அங்கு கடைகள் வணிகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொலைக்காட்சியில் உரையாற்றிய Brovary நகர மேயர், Brovary மாவட்டத்திலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறிவிட்டனர்.
ரஷ்ய விமானத்தை சிறைபிடித்து பிரித்தானியா அதிரடி!
தற்போது மீதமுள்ள ரஷ்ய வீரர்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் குறிப்பாக கண்ணி வெடிகளை உக்ரேனிய படைகள் அகற்றி வருகின்றனர் என மேயர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள Bucha, Makariv மற்றும் Borodyanka மீண்டும் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன அதிகாரிகள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சமீபத்திய பகுதியாக தற்போது Brovary நகரை உக்ரைன் படைகள் ரஷ்யா படைகளிலிடமிருந்து மீட்டுள்ளனர்.