குட்டி அணியில் அதிரடி வீராங்கனையாக உருவெடுத்த சொர்ணா: எதிரணி வீராங்கனையே வியந்து கூறிய விடயம்
தங்களுக்கு எதிராக அதிரடி அரைசதம் அடித்த சொர்ணா அக்தரை தென் ஆப்பிரிக்காவின் ட்ரையான் வியந்து பாராட்டினார்.
சொர்ணா அக்தர்
மகளிர் உலகக்கிண்ணத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேச அணியின் சொர்ணா அக்தர் (Shorna Akter) அதிரடி அரைசதம் அடித்தார்.
34 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், தனது சக அணி வீராங்கனை நிகர் சுல்தானாவின் (39 பந்துகளில்) சாதனையை முறியடித்தார்.
அத்துடன் வங்காளதேசத்தின் 14 ஆண்டுகால கிரிக்கெட்ட வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டவரும் இவரே.
18 வயதில் இந்த சாதனையை படைத்திருக்கும் சொர்ணா, தற்போது வங்காளதேசத்தின் அதிரடி வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
டெத் ஓவர்களில் மிரட்டல்
அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை டெத் ஓவர்களில் சொர்ணா சிதறடித்தது பலரையும் மிரள வைத்தது.
ஆனாலும், தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் க்ளோ ட்ரையான் அவரை பாராட்டி பேசினார். அவர், "அவர் மிகவும் நல்ல நோக்கத்துடன் வந்தார். அவருடைய வேகத்துடன் விளையாட வேண்டும்.
முடிந்தவரை மட்டையின் கீழ் செல்ல முயற்சிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அவருக்கு ஒரு அழகான ஸ்விங் இருக்கிறது" என்றார்.
சொர்ணா அக்தர் 22 ஒருநாள் போட்டிகளில் 216 ஓட்டங்களும், 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் 5 சிக்ஸர், 15 பவுண்டரிகளும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |