புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்... இரத்த கறையுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்: நடுவானில் என்ன நடந்தது?
அமெரிக்காவில் Utah Jazz கூடைப்பந்து அணி வீரர்கள் பயணித்த விமானத்தின் இன்ஜின் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Memphis Grizzlies அணியுடன் விளையாடுவதற்காக Utah Jazz அணி, SALT LAKE CITY-யிலிருந்து Memphis நகரத்திற்கு Delta flight 8944 என்ற சார்டர் விமானத்தில் புறப்பட்டது. புறப்படும் போது விமானம் மீது பறவைகள் தாக்கியதில் அதன் இன்ஜின் தீப்பிடித்து எரிந்து செயலிழந்துள்ளது.
விமானி உடனே கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்டு, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விமானம் அவசரநிலையாக SALT LAKE CITY விமான நிலையத்திலே பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பறவைகள் தாக்கியதில் விமானத்தின் முன் பக்கத்தில் இரத்த கறை படிந்திருந்துள்ளது.
பின் விமானம் பழுது பாரக்கும் பணிக்காக இழுத்துச்செல்லப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து Utah Jazz அணி வீரர்கள் மாற்று விமானத்தில் Memphis நகரத்திற்கு சென்றடைந்துள்ளனர்.
Delta 757 damaged following bird strike on departure from Salt Lake City. Aircraft returned for safe landing. https://t.co/uLcz7BRVvW pic.twitter.com/uMgbXzSmFF
— Breaking Aviation News & Videos (@breakingavnews) March 31, 2021