சருமம் எப்பவும் இளமையா இருக்கணுமா ? இதை செய்தால் மட்டும் போதுமே!
இன்றைய காலத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர்.
இப்படி காட்சியளிப்பதற்கு சரும பராமரிப்புகளும், உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
அக்காலத்தில் எல்லாம் பெண்கள் தங்கள் சருமத்திற்கு எவ்வித பராமரிப்புக்களும் கொடுக்காமலேயே அழகாகவும் இளமையுடனும் காட்சியளித்தனர். ஆனால் இன்றைய மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் பெண்கள் தவறாமல் தங்களின் சருமத்தைப் பராமரித்தால் தான் இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்க முடியும்.
அந்தவகையில் சருமம் எப்போதும் அழகுடன் இருக்க செய்யக்கூடிய ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 1/2டீ ஸ்பூன்
- தேன் - 1 டீ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு தட்டில் சிறுதளவு கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டீ ஸ்பூன் தேன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக குழப்பிக் கொள்ளுங்கள். பேஸ்ட் ஸ்மூத்தாக ஆனதும் கூட கொஞ்சம் தேன் சேர்த்து குழப்பிக் கொள்ளுங்கள்.
நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது இதை முகத்தில் அப்ளே செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக ஒரு டவலை கொண்டு துடைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் நன்றாக அப்ளை செய்யுங்கள். கண்களுக்கு கீழ், உதடுக்கு கீழ், மூக்கு என எல்லா இடங்களிலும் அப்ளை செய்ய வேண்டும்.
பிறகு சிறிது நேரம் காய விட வேண்டும். பிறகு சாதாரண நீரில் முகத்தை அலம்பிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு டவலை கொண்டு நன்றாக முகத்தை துடைக்கவும்.