பெண்களே பின்புற சதையை குறைக்க வேண்டுமா? இதோ எளிய உடற்பயிற்சிகள்!
பொதுவாக பெண்களுக்கு பின்புற சதைப்பகுதி அதிகமாக இருந்தால் இறுக்கமான ஆடைகளோ அல்லது தளர்வான ஆடைகளோ எதை அணிந்தாலும் அசிங்கமாகவும் வயதான தோற்றத்தையும் அளிக்கும்.
எனவே உடலின் ஒவ்வொரு பகுதியிலும் எடையை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த பின்புற எடையை குறைக்க ஒரு சில பயிற்சிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
காஃபின் க்ரஞ்சஸ்(coffin crunches)
தரையில் நேராகப் படுத்து, இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி, தலைமேல் நோக்கியவாறு கைகளை இரண்டு பக்கத்திலும் ஊன்றி தலையை மட்டும் மேல் நோக்கித் தூக்க வேண்டும்.
அதன் பின் முட்டிகள் மடக்கிய நிலையில் ஓரிரு விநாடிகளுக்கு கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோல் தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.
சைடு க்ரஞ்சஸ் (Side crunches)
தரையில் நேராகப் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சமமாக நீட்டி இரண்டு கைகளையும் தலையின் பின் கட்டிக் கொள்ள வேண்டும்.
வலது காலின் மேலே இடது காலை வைத்து தலையை லேசாக உயர்த்தியவாறு ஓரிரு வினாடிகள் இருக்க வேண்டும். அதேபோல், இடது காலின் மேலே வலது காலை வைக்க வேண்டும். இதேபோல் 15 முறை இரண்டு கை கால்களையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.
அப்டாமினல் ஸ்ட்ரச்(Abdominal stretch)
தரையை பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன் ஊன்றி உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்த வேண்டும்.
அதன் பின் மொத்த அழுத்தமும் கைகளில் வைத்து ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வந்து மீண்டும் தலை மற்றும் உடலையும் மேலே தூக்கியவாறு செய்ய வேண்டும்.
புஷ் அப்(Push-up)
முதலில் ஐந்து புஷ் அப் பயிற்சிகள் என்று ஆரம்பித்து படிப்படியாக புஷ் அப் பயிற்சிகளை அதிகரித்து 20 புஷ் அப் பயிற்சிகள் வரை செய்து வந்தால் பின்புறத்தில் உள்ள தேவையற்ற சதைகளை எளிதில் குறைக்க முடியும்.