சொந்த பிள்ளைகளின் தலை இல்லாத சடலங்களை காட்டி அச்சுறுத்திய கொடூர தந்தை
அமெரிக்காவில் தந்தை ஒருவர் தமது இரு பிள்ளைகளைக் கொன்று தலை இல்லாத சடலங்களை எஞ்சிய பிள்ளைகளுக்கு காட்டி அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள மொஜாவே பாலைவனம் அருகே கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் திகதி மாரிஸ் டெய்லர் ஜூனியர்(12), மற்றும் மாலியாகா டெய்லர்(13) ஆகிய இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், குறித்த சிறுவர்களின் தந்தையே அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதும், பின்னர் தலையை துண்டித்ததும் அம்பலமானது.
இச்சம்பவம் நவம்பர் 29ம் திகதி நடந்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. குறித்த தந்தை, சொந்த பிள்ளைகளின் தலையில்லாத சடலத்தை குடியிருப்புக்குள் பல நாட்கள் வைத்திருந்து, எஞ்சிய பிள்ளைகளை அச்சுறுத்தியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து 34 வயதான மாரிஸ் டெய்லர் சீனியர் மீது கொலை மற்றும் சிறார் துஸ்பிரயோக வழக்கு பதியப்பட்டது. மேலும், தமது பிள்ளைகளை உணவளிக்காமல் துன்புறுத்தியதும் பொலிஸ் தரப்பில் கண்டறியப்பட்டது.
மாரிஸ் டெய்லர் சீனியரின் குடியிருப்பில் சடலங்களை கண்டெடுக்கப்பட்ட டிசம்பர் 4ம் திகதியே, பொலிசாரால் அவர் கைதாகியுள்ளார்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்த பிள்ளைகளை கொல்ல கணவருக்கு உதவியதாக கூறி 44 வயதான Natalie Brothwell என்பவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக உள்ளார்.