"முதுகெலும்பு கீழே நடுங்குகிறது...": கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையால் திடீர் முடிவெடுத்த பிரபல பாடகி!
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளம் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா நகரில் நடைபெற்று வரும் போராட்டத்தின் மத்தியில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இசை நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளார்.
திடீர் முடிவெடுத்த பிரபல பாடகி
கச்சேரி செப்டம்பர் 14 அன்று திட்டமிடப்பட்டது, ஆனால் இப்போது அக்டோபரில் புதிய திகதிக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற பாடகி, தனது இன்ஸ்டாகிராமில் "கொடூரமான சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நான் ஒரு பெண்ணாக இருந்ததால், அவள் கடந்து வந்திருக்க வேண்டிய கொடூரத்தைப் பற்றிய எண்ணம் நினைத்துப் பார்க்க முடியாதது. அதையும் மீறி நினைத்து பார்த்தால் என் முதுகெலும்பில் நடுங்குகிறது" என கூறியுள்ளார்.
31 வயதான முதுகலை பயிற்சி மருத்துவரின் சடலம் ஆகஸ்ட் 9 அன்று அரசு மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் தனது 36 மணி நேர பணியின் போது கொடூரமாக தாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறையின் குடிமைத் தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
மேலும் கொல்கத்தாவில் நடக்கவிருந்த அவருடைய நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளார். உலக அளவில் பெண்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |