சரவெடியாய் வெடித்த ஷ்ரேயாஸ் ஐயர்: சன்ரைசர்ஸை ஊதித்தள்ளிய பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபிஷேக் ஷர்மா 74
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நியூ சண்டிகரில் நடந்தது.

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் ஷர்மா 74 (28) ஓட்டங்களும், கிளாசென் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களும், இஷான் கிஷன் 27 ஓட்டங்களும் விளாச, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 219 ஓட்டங்கள் குவித்தது. அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங் தலா 2 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ப்ரியான்ஷ் ஆர்யா 20 பந்துகளில் 57 ஓட்டங்களும் (5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), பிரப்சிம்ரன் சிங் 25 பந்துகளில் 51 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாசினர்.

ஷ்ரேயாஸ் ஐயர் வாணவேடிக்கை
அதன் பின்னர் வந்த அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தனியாளாக வாணவேடிக்கை காட்டினார்.

கடைசி வரை களத்தில் நின்ற அவர், 33 பந்துகளில் 69 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷிவாங் குமார் 3 விக்கெட்டுகளும், ஹார்ஷ் தூபே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |