கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயஸ் ஐயர்; இந்தியா அபார வெற்றி
shreyas iyer breaks kohli record, india won by 8 wickets vs wi in 1st t20: ஷ்ரேயஸ் ஐயரின் அதிரடி சதத்தால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.1 ஓவர்களில் 171 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில், அதிகபட்சமாக ஷாய் ஹோப் 52 ஓட்டங்களும், ரதர்ஃபோர்ட் 56 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்தியா தரப்பில், அதிகபட்சமாக நமன் தீர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 14.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது.
இதன் மூலம், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயஸ் ஐயர்
இந்தியா தரப்பில், அதிகபட்சமாக அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 102 ஓட்டங்கள் குவித்தார்.

இது ஷ்ரேயஸ் ஐயரின் முதல் சர்வதேச T20 சதம் ஆகும். மேலும், T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய வீரர் அடித்த அதிவேக சதம் ஆகும்.
மேலும், இதன் மூலம் T20 போட்டிகளில் சேசிங்கின் போது சதமடித்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமையை ஷ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, விராட் கோலி 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்ததே இந்திய அணித்தலைவர் சேசிங்கின் போது எடுத்த அதிகபட்ச ஓட்டமாக இருந்தது.
மேலும், சர்வதேச T20 போட்டிகளில் ரோஹிட்ஸ் சர்மா, சூர்யகுமார் யாதவிவிற்கு அடுத்தபடியாக சதமடித்துள்ள 3வது இந்திய அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.