ஒரே ரூமில் சாஹல் மனைவி, ஸ்ரேயாஸ் ஐயர்? இன்ஸ்டாவில் போட்ட ஒரே பதிவு: ஷாக்கான ரசிகர்கள்
சாஹல் மனைவி, ஸ்ரேயாஸ் ஐயருக்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சாஹல் மனைவிக்கும், ஸ்ரேயாஸ் ஐயருக்கும் தொடர்பா?
இந்திய கிரிக்கெட் உலகில் சில கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளை மற்றொரு கிரிக்கெட் வீரர் அபகரிப்பது புதிதல்ல. இதுபோல் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய், வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியை அபகரித்தார். அதேபோல், இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷானின் மனைவியை வீரர் தரங்கா அபகரித்து திருமணம் செய்து கொண்டார்.
அந்த லிஸ்ட்டில் இப்போது இன்னொரு கிரிக்கெட் வீரரின் மனைவி சேர்ந்துள்ளார்.
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் மனைவி தனஸ்ரீயும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் நெருக்கமாக பழகி வருவதாக சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி விடும். ஆனால், இந்த கிசுகிசுக்கு சாஹல் மனைவி இதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் சாஹலுடன் ஒன்றாக இணைந்து தான் வாழ்ந்து வருகிறேன் என்று இந்த வதந்தியை மறுத்தார்.
ஒரே பதிவால் ரசிகர்கள் ஷாக்
இந்நிலையில், சாஹல் மனைவி தனுஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. தனுஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் மும்பையில் உள்ள அடுக்குமாடியை புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டிருந்தார். அதே புகைப்படத்தை ஸ்ரேயாஸ் ஐயரும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் என்னடா இது இரண்டு அடுக்குமாடி புகைப்படம் ஒன்றாக உள்ளது. அப்போ... தனுஸ்ரீ கூறியது எல்லாம் பொய்யா... நிச்சயமாக சாஹல் தன் மனைவியை விவாகரத்து செய்தே ஆக வேண்டும் என்று கண்டித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |