தோனி, கோஹ்லி இல்லை.,ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் கேப்டன்! அரிய சாதனை படைத்த ஷ்ரேயாஸ் ஐயர்
பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பஞ்சாப்
ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் தகுதி பெற்றுவிட்டன.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 2014ஆம் ஆண்டிற்கு பின் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த பெருமையை அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) பெற்றுள்ளார். அத்துடன் அவர் அரிய சாதனையையும் படைத்துள்ளார்.
ஷ்ரேயாஸ்
டெல்லி கேபிட்டல்ஸ் (இருமுறை) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளையும் சேர்ந்து, மொத்தம் 3 அணிகளை பிளே ஆப்பிற்கு கொண்டுசென்ற ஒரே அணித்தலைவர் ஷ்ரேயாஸ்தான்.
இதன்மூலம் 18 ஆண்டுகால ஐபிஎல் இதனை செய்துள்ள முதல் அணித்தலைவர் என்ற வித்தியாசமான, அரிய சாதனையை செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |