கிண்ணத்தை வென்றுகொடுத்தவருக்கு இல்லை..ஆனால் இன்னொருவருக்கு பாராட்டு - முன்னாள் வீரர் ஆதங்கம்
ஐபிஎல் கிரிக்கெட்டில் அணித்தலைவரை விட கவுதம் கம்பீருக்கு பாராட்டு கிடைத்ததாக முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது மறைமுக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
மேலும், இரவு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றதால், ஒரே நேரத்தில் பஞ்சாப் மற்றும் குஜராத், பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் முன்னேறியதுதான். இதற்கு காரணம் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர்தான்.
சுனில் கவாஸ்கர் வருத்தம்
இந்த நிலையில், கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கிண்ணத்தை வென்றுகொடுத்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்ததுடன், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை கொல்கத்தா அணி வென்றபோது ஷ்ரேயாஸுக்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை. அனைத்து பாராட்டும் மற்றொருவருக்கு சென்றுவிட்டது.
மைதானத்தில் இருக்கும்போது அணித்தலைவர்தான் ஆட்டத்தின்போது முக்கிய பங்காற்றுகிறாரே தவிர, ஓய்வு அறையில் அமர்ந்திருக்கும் நபர் அல்ல. இந்த ஆண்டு ஷ்ரேயாஸுக்கு நியாயமான பாராட்டு கிடைக்கிறது. பஞ்சாப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கு யாரும் அனைத்து பாராட்டுகளையும் கொடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |