துணிச்சலான புதிய உலகத்தை நோக்கி.., எம்பியான அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்
மக்கள் நீதி மயயம் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்ற நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் வாழ்த்து
கடந்த 2018-ம் ஆண்டில் நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர், 2021 சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கினார்.
அப்போது, கோவை தெற்கு தொகுதியில் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதியிடம் தோற்றார். பின்னர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட் ஒப்பந்தத்துடன் திமுக கட்சியில் கூட்டணியில் இணைந்தார்.

வனத்துறை அதிகாரி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் பறிமுதல்.., லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
இந்நிலையில், ராஜ்ய சபாவில் தமிழக எம்.பி-க்கள் ஆறு பேரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ராஜ்யசபா எம்பியாக நேற்று தமிழில் பதவியேற்றார்.
இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்தவகையில் நடிகையும், கமல் ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன், "துணிச்சலான புதிய உலகத்தை நோக்கிய பயணத்தை இன்றைய நாள் குறிக்கிறது.
மாநிலங்களவையில் வலிமையுடனும், உற்சாகத்துடனும் அவையில் எதிரொலிக்கும் வகையில் உங்களுக்கே உரிய குரலில் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்ததைப் பார்த்தது என்றென்றும் என் மனதில் பதிந்த ஒரு தருணம்.
எப்போதும் போல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடையவும் நான் விரும்புகிறேன்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |