விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா - எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன?
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா எதிர்கொள்ள உள்ள உடல்ரீதியான சவால்கள் குறித்து காணலாம்.
பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் கடந்த ஜூன் 25 ஆம் திகதி விண்வெளிக்கு புறப்பட்டார்.
இதன் மூலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற உள்ளார்.
18 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கிய அவர், அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில், சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களும், மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கினர்.
அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் இன்று மாலை 3 மணியளவில், அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் கடலிறங்கியது. விண்கலம் தற்போது கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.
அங்கிருந்து 4 விண்வெளி வீரர்களையும் அமெரிக்க கடற்படையினர் படகுகள் மூலம் மீட்க உள்ளனர். அதன் பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
எதிர்கொள்ள உள்ள சவால்கள்
18 நாட்கள் விண்வெளியில், நுண் ஈர்ப்பு விசையில் கழித்ததால், அவரது எலும்பு அடர்த்தி மற்றும் தசையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
தற்போது பூமிக்கு வந்துள்ள நிலையில், இங்குள்ள ஈர்ப்பு விசையை எதிர்கொள்வதில் அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கும். அதில் நடப்பது மற்றும் காது கேட்பதில் சில சிக்கல்கள் இருக்கும்.
விண்வெளிக்கு சென்று வந்தவர்கள் பொதுவாக விண்வெளி இயக்க நோயால் பாதிக்கப்படுவார்கள். உள் காதில் இருந்து பெறும் ஈர்ப்பு மற்றும் முடுக்கம் தகவல்களுடன் மூளை குழப்பமடையும்.
விண்வெளியில், நுண் ஈர்ப்பு விசையில் வாழும் போது, மூளை உள் காதைக் கேட்காமல் இருக்க பழகி இருக்கும். இது அவர்கள் பூமிக்குத் திரும்பும்போது சவாலாக மாறும்.
விண்வெளி வீரர்கள் மீண்டும் தங்கள் பழைய உடற்சமநிலை, வலிமை உள்ளிட்டவற்றை பெரும் வகையில் அவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தைப் பெறுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |