விண்வெளி வீரர் வீட்டிற்கு வந்தால் என்ன நிகழும்? அனுபவத்தை பகிர்ந்த சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய பின்னர் ஏற்பட்ட தாக்கம் குறித்து சுபான்ஷு சுக்லா பேசியுள்ளார்.
பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் கடந்த ஜூன் 25 ஆம் திகதி விண்வெளிக்கு சென்றனர்.
இதன் மூலம், விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமைகளை சுபான்ஷு சுக்லா பெற்றார்.
18 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கிய அவர், அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஆராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் 15 ஆம் திகதி பூமிக்கு திரும்பினார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள அவர், ஆகஸ்ட் மாத 3வது வாரத்தில், இந்தியாவிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஆகஸ்ட் 15க்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லும் விமானங்கள் விலை அதிகரிப்பு.., என்ன காரணம்?
வீட்டில் நடந்த மாற்றம்
இதில், "விண்வெளியில் இருந்து பிரதமர் மோடியிடம் பேசிய போது, இந்திய தேசியக் கொடி என் பின்னணியில் இருந்தது, விண்வெளி பயணத்தில் எனக்கு மகத்துவமான தருணமாக அமைந்தது. அந்த தருணம் இந்தியா ஒரு பார்வையாளராக அல்ல, சம பங்கேற்பாளராக உரையாடலில் மீண்டும் நுழைவதைக் குறிக்கிறது.
41 அண்டுகளுக்குப்பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்கு திரும்பி இருக்கிறார். இந்த முறை ஒரு தனிமையான பாய்ச்சல் அல்ல, இந்தியாவின் 2வது சுற்றுப்பாதையின் தொடக்கமாகும். இந்த முறை, நாங்கள் பறக்க மட்டுமல்ல, வழிநடத்தவும் தயாராக இருக்கிறோம்.
ஆக்ஸியம்-4 திட்டம் எனது எதிர்பார்ப்புகளை விஞ்சி, விலைமதிப்பற்ற கற்றல் அனுபவங்களை வழங்கியது, இந்தியாவின் எதிர்கால ககன்யான் திட்டத்திற்கு இது விலைமதிப்பற்றதாக இருக்கும்" என கூறினார்.
மேலும், விண்வெளியில் பூஜ்ய ஈர்ப்பு விசையில் இருந்து விட்டு பூமிக்கு திரும்பிய பின்னர், ஈர்ப்பு விசையால் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். நண்பர் ஒருவர் புகைப்படம் எடுக்க கேட்டபோது, செல்போன் கையில் எடுக்கும் போது மிகவும் கனமாக இருந்ததை உணர்ந்தேன்.
மேலும், லேப்டாப் என் அருகில் மிதக்கும் என நினைத்து, அதை கீழே விட்டேன்.நல்வாய்ப்பாக தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது, அதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |