பின்னோக்கி ஓடி பறவை போல பறந்து கேட்ச் பிடித்த சுப்மன் கில்! வியக்கவைக்கும் வீடியோ
ஐபிஎல் போட்டியில் அந்தரத்தில் பறந்தபடி சுப்மான் கில் பிடித்த கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோ - குஜராத் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில், 3.3வது ஓவரில் குஜராத் வீரர் வருண் ஆரூண் வீசிய பந்தை எவன் லீவிஸ் மிட் ஆஃப் திசையில் நோக்கி பெரிய ஷாட் ஆட முயன்றார்.
அப்போது பந்து ஆகாயத்தில் பறந்து சென்றது. அப்போது பவர் பிளே என்பதால் வீரர்கள் அனைவரும் உள் வட்டத்தில் தான் நின்றனர். இதனால் நிச்சயம் பவுண்டரி இல்லை சிக்சர் என ரசிகர்கள் நினைத்தனர்.
What a catch it was from shubman gill ?#GTvLSG #AavaDe #IPL2022 pic.twitter.com/9G3jV2lE6L
— daily video of shubman gill ? (@yeeahsh) March 29, 2022
இதையும் படிங்க: சீனிவாசனிடம் தோனி சொன்ன வார்த்தை! ஆரம்பத்திலேயே கேப்டன் பதவியில் இருந்து விலக காரணம்
ஆனால் இளம் வீரர் சுப்மான் கில், பந்தை கண்டதும் கபில் தேவ் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஓடியது போல் பின்நோக்கி ஓடினார்.
ஆனால் பந்து அப்போதும் அவர் கைக்கு எட்டாது என்று உணர்ந்த சுப்மான் கில், அப்படியே பறவை போல் பறந்து கேட்ச் பிடித்தார். அவர் அந்த கேட்சை விட்டுவிடுவார் என நினைத்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஆச்சரியத்தில் உரைந்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.